Tuesday 7th of May 2024 12:54:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்!


தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார் .

ரேணிகுண்டா உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் தீப்பெட்டி கணேசன் நடித்துள்ளார். இவருடைய உயரம் மற்றும் தலை முடி அலங்காரத்தால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்பட்டார்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீப்பெட்டி கணேசன் இன்று காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தீப்பெட்டி கணேசன் என்ற தம்பி கார்த்தி உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன். அவருக்கு அன்புநிறை இதய அஞ்சலிகள் என தமிழ்த் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE